விண்வெளியில் நழுவிய காலம்: நீண்ட பயணங்களின் வரலாறு

விண்வெளியில் நழுவிய காலம்: நீண்ட பயணங்களின் வரலாறு

விண்வெளிப் பயணங்கள் எப்போதும் திட்டமிட்டபடி நடைபெறுவதில்லை. தொழில்நுட்ப கோளாறுகள், அரசியல் நெருக்கடி, மற்றும் எதிர்பாராத அனர்த்தங்கள், விண்வெளியினர்களை எதிர்பார்த்ததை விட நீண்ட காலம் அங்கு தங்க வைக்கலாம். சமீபத்தில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பூச் வில்ல்மோர் வெறும் 8 நாட்கள் மட்டுமே செல்ல நினைத்தும் 286 நாட்கள் ஐ.எஸ்.எஸ்.-ல் கழிக்க வேண்டியதாகி விட்டது. இது இதற்கு முன்னும் பல முறை நிகழ்ந்திருக்கிறது.

1991 ஆம் ஆண்டு, சோவியத் விண்வெளியாளர் செர்கீ கிரிக்கலேவ் 4 மாதம் இருப்பதற்காக விண்வெளிக்கு சென்றார். ஆனால் சோவியத் யூனியன் வீழ்ந்ததால், 313 நாட்கள் விண்வெளியில் கழிக்க வேண்டியிருந்தது. 2003-இல் ‘கொலம்பியா’ விபத்து காரணமாக மூன்று விண்வெளியாளர்கள் 5 மாதங்கள் தங்கினர். 2022-இல் நாசாவின் பிராங்க் ரூபியோ 371 நாட்கள் விண்வெளியில் தங்கினார். இவை எல்லாம், விண்வெளிப்பயணங்கள் எவ்வளவு ஆபத்தானவை என்பதையும், நேரத்திற்குள் எதையும் நிர்ணயிக்க முடியாது என்பதையும் உணர்த்துகின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *