அண்டார்டிகாவில் பிரம்மாண்ட எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு, உலக அரசியலில் புதிய திருப்பமா?

அண்டார்டிகாவின் வெடல் கடலில் ரஷ்ய விஞ்ஞானிகள் ஒரு பிரம்மாண்டமான எண்ணெய் வளத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இது 511 பில்லியன் பேரல் எண்ணெயைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் ₹306 லட்சம் கோடி மதிப்புள்ள இந்தக் கண்டுபிடிப்பு, சவுதி அரேபியாவின் மொத்த எண்ணெய் இருப்பை விட இரண்டு மடங்கு அதிகம். அண்டார்டிக் ஒப்பந்தத்தின்படி இந்த பகுதியில் இராணுவ அல்லது வணிக நடவடிக்கைகளுக்கு தடை உள்ளதால், இந்த மாபெரும் எண்ணெய் வளம் உலக அரசியலில் புதிய பதட்டங்களை உருவாக்கக்கூடும்.
இந்தக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, இது ஒரு புதிய உலகப் போருக்கு வழிவகுக்குமா என்ற ஊகங்கள் சர்வதேச அளவில் எழுந்துள்ளன. ரஷ்யா ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு எந்தவித வணிகச் சுரங்கத்திலும் ஈடுபடாது என்று கூறியிருந்தாலும், மற்ற நாடுகள் அதன் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. இந்த எண்ணெய் வளம் குறித்த வல்லரசு நாடுகளுக்கிடையேயான போட்டி அதிகரித்தால், எதிர்காலத்தில் நிலைமை மேலும் சிக்கலாகலாம்.