98வது ஆஸ்கர் மேடையை அதிரவைக்க வரும் கோனன் ஓ’பிரையன் மற்றும் நேரடி ஒளிபரப்பு விவரங்கள்

98வது ஆஸ்கர் மேடையை அதிரவைக்க வரும் கோனன் ஓ’பிரையன் மற்றும் நேரடி ஒளிபரப்பு விவரங்கள்

லாஸ் ஏஞ்சல்ஸின் டால்பி தியேட்டரில் இன்று இரவு 98வது அகாடமி விருதுகள் நடைபெற உள்ளது. பிரபல நகைச்சுவை நடிகர் கோனன் ஓ’பிரையன் இந்த விழாவை தொகுத்து வழங்குகிறார். இந்த ஆண்டு 16 பரிந்துரைகளுடன் ‘சினர்ஸ்’ திரைப்படம் முன்னிலையில் உள்ளது. சிறந்த நடிகைக்கான போட்டியில் ஜெஸ்ஸி பக்லி பலமான வேட்பாளராகக் கருதப்படுகிறார். ராபர்ட் டவுனி ஜூனியர் மற்றும் நிக்கோல் கிட்மேன் போன்ற உலகத்தாரகைகள் விருதுகளை வழங்க உள்ளனர்.

இந்திய ரசிகர்கள் மார்ச் 16 திங்கள் கிழமை அதிகாலை 3:30 மணி முதல் ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் மூவிஸ் சேனலில் இந்த பிரம்மாண்ட விழாவைக் காணலாம். அன்றைய தினம் இரவு 9 மணிக்கு இதன் மறுஒளிபரப்பும் செய்யப்படும். பிரியங்கா சோப்ரா மற்றும் முன்னணி கலைஞர்களின் நேரடி இசை நிகழ்ச்சிகள் இந்த விழாவிற்கு மேலும் மெருகூட்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *