75 முறை உருமாறி மீண்டும் மிரட்டும் புதிய வகை கொரோனா சிக்காடா வைரஸ்

75 முறை உருமாறி மீண்டும் மிரட்டும் புதிய வகை கொரோனா சிக்காடா வைரஸ்

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ‘சிக்காடா’ எனப்படும் உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. சுமார் இரண்டு ஆண்டுகள் மறைந்திருந்த இந்த வைரஸ், தற்போது 75-க்கும் மேற்பட்ட மரபணு மாற்றங்களுடன் மீண்டும் உருவெடுத்துள்ளது. இது உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது.

தொண்டை வலி, உடல் சோர்வு மற்றும் காய்ச்சல் இதன் முக்கிய அறிகுறிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வைரஸ் நுரையீரலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், முதியவர்கள் மற்றும் பிற நோயுள்ளவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *