7 நிமிடங்கள் இதயம் நின்றது; மீண்டும் உயிர் பிழைத்த 22 வயது பெண்! ‘மரணத்திற்குப் பின்’ நடந்தது என்ன

சுமார் 7 நிமிடங்கள் இதயத் துடிப்பு நின்றுபோன பிறகு, ஒரு 22 வயது பிரிட்டிஷ் பெண்ணின் உடலில் திடீரென உயிர் திரும்பியது. டார்பிஷையரில் வசிக்கும் கோர்ட்னி ஸ்டாக்ஸ் என்ற அந்தப் பெண் இந்த பயங்கரமான அனுபவத்தைப் பெற்றார். கார்டியாக் அரெஸ்ட்டின் போது, அவரது பெற்றோர் அருகில் இருந்தனர். எல்லாம் முடிந்துவிட்டதாக குடும்பத்தினர் நினைத்தபோது, திடீரென உடலில் துடிப்பு ஏற்பட்டது. மரணத்தின் விளிம்பில் இருந்து திரும்பிய அவர், அந்த 7 நிமிடங்களில் தனக்கு என்ன நடந்தது என்பதை உலகத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
வீட்டில் திடீரென மயங்கி விழுந்த கோர்ட்னிக்கு, அவரது தந்தை உடனடியாக சிபிஆர் (CPR) கொடுக்கத் தொடங்கினார். இதன் விளைவாகவே 7 நிமிடங்களுக்குப் பிறகு அவரது இதயம் மெதுவாகத் துடிக்க ஆரம்பித்தது. சோதனையில், அவர் பிறப்பிலேயே மைட்ரல் அன்னுலர் டிஸ்ஜங்ஷன் (Mitral Annular Disjunction) என்ற அரிய இருதய நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது, இதுவே கார்டியாக் அரெஸ்ட்டுக்குக் காரணம். தனது தந்தை உடனடி சிபிஆர் வழங்கியதாலேயே தான் இன்று உயிருடன் இருப்பதாக கோர்ட்னி நன்றியுடன் தெரிவித்துள்ளார்.