6361 கோடி ரூபாய் மெகா சம்பளம் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் வருமானம் உலகையே அதிர வைக்கிறது

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 692 மில்லியன் டாலர் (சுமார் ₹6,361 கோடி) மதிப்பிலான பிரம்மாண்ட ஊதியத் தொகுப்பை வழங்க ஆல்பாபெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த வருமானத்தில் பெரும் பகுதி நிறுவனத்தின் பங்குச் சந்தை செயல்திறனைப் பொறுத்தே அமையும். இதன் மூலம் உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ-க்களில் ஒருவராக சுந்தர் பிச்சை உருவெடுத்துள்ளார்.
சுந்தர் பிச்சையின் இந்த புதிய ஒப்பந்தத்தில் வேமோ தன்னாட்சி கார்கள் மற்றும் விங் ட்ரோன் டெலிவரி போன்ற எதிர்கால திட்டங்களின் பங்குகளும் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2015-ல் அவர் பொறுப்பேற்றது முதல் கூகுள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஏழு மடங்கு உயர்ந்துள்ளது. தற்போது 1.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் டாப் பில்லியனர்கள் பட்டியலில் சுந்தர் பிச்சை தனது இடத்தை உறுதி செய்துள்ளார்.