6 தொகுதிகள் வேண்டும் என கம்யூனிஸ்டுகள் பிடிவாதம் காட்டும் நிலையில் திமுக கடும் முட்டுக்கட்டை
March 13, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தல் தொகுதி பங்கீட்டில் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே கடும் இழுபறி நீடிக்கிறது. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 6 தொகுதிகள் வேண்டும் என பிடிவாதம் காட்டி வரும் சூழலில், 5 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என திமுக திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
ஏற்கனவே காங்கிரஸுடனான பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், தற்போது இடதுசாரி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. திமுக தனது கறார் முடிவில் உறுதியாக இருப்பதால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சிபிஐ மற்றும் சிபிஎம் தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.