6 ஏக்கர் நிலம்: தாயை நிர்வாணமாக்கி கொன்ற மகள் – மருமகன்! வெளியான அதிர்ச்சி தகவல்
December 17, 2025

திருப்பத்தூர் மாவட்டம் புதூர்நாடு நடுக்குப்பம் பகுதியில் 42 வயதான சின்னகாளி என்பவரின் சடலம் பலத்த காயங்களுடன் நிர்வாண நிலையில் விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னகாளிக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலத்தைக் கைப்பற்ற, அவரது மகள் கீதாவும் மருமகன் சிதம்பரமும் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர்.
இதையடுத்து சொத்துப் பிரச்சினை காரணமாக நடந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த இருவரும் சின்னகாளியைத் தாக்கி கொடூரமாகக் கொலை செய்தனர். கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட கொலையாக இதனைத் திசை திருப்ப, சடலத்தை நிர்வாணப்படுத்தி அருகே வீசிச் சென்றுள்ளனர். சொத்துக்காக தாய் கொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.