51 ஆண்டு வித்தியாசம்! 2 கோடி ‘மணமகள் விலை’ கொடுத்து 24 வயது இளம்பெண்ணை மணந்த 74 வயது முதியவர்; சர்ச்சை அதிகரிப்பு

இந்தோனேசியாவில் 74 வயதான முதியவர் ஒருவர் தன்னைவிட 50 வயது இளையவரான 24 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டது நாட்டையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. கிழக்கு ஜாவாவின் பசிட்டான் ரீஜென்சியைச் சேர்ந்த தர்மன் என்ற அந்த முதியவர், 24 வயதான ஷேலா அரிக்காவை மணப்பதற்காக ‘மணமகள் விலை’யாக சுமார் 2 கோடி ரூபாய் (3 பில்லியன் இந்தோனேசிய ரூபியா) ரொக்கமாக வழங்கியதாகத் தெரிகிறது. ஆரம்பத்தில் 60 லட்சம் ரூபாய் வழங்குவதாகக் கூறப்பட்ட நிலையில், திருமண மேடையிலேயே அந்தத் தொகை கிட்டத்தட்ட மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது, இந்த மிகப்பெரிய காசோலையின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த பிரம்மாண்டமான ஏற்பாடுகளைத் தொடர்ந்து, புதுமணத் தம்பதியினர் சர்ச்சையில் சிக்கினர். திருமணத்தின் புகைப்படக் கலைஞர்களுக்கான கட்டணத்தைச் செலுத்தாமல் அவர்கள் அவசரமாக இடத்தை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. இந்த புகாரின் அடிப்படையில் உள்ளூர் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், தர்மன் பின்னர் சமூக ஊடகங்களில், மணமகளுக்கு வழங்கப்பட்ட பணம் உண்மையானது என்றும், அவர்கள் ஓடிவிடவில்லை, மாறாக தேனிலவுக்காக சென்றுள்ளதாகவும் வலியுறுத்தினார். இந்த அசாதாரண வயது வித்தியாசம் மற்றும் நிதிப் பரிவர்த்தனை இந்தோனேசிய சமூகத்தில் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.