“5000 ஆண்டு கால தொப்புள்கொடி உறவு” – திமுகவை வீழ்த்த துவரை கோமானாக வந்த மோடி

“5000 ஆண்டு கால தொப்புள்கொடி உறவு” – திமுகவை வீழ்த்த துவரை கோமானாக வந்த மோடி

திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பிரதமர் மோடிக்கும் தமிழகத்திற்கும் இடையிலான உறவு பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது எனப் பெருமிதம் கொண்டார். சங்க இலக்கியங்களில் கூறப்படும் ‘துவரை’ (துவாரகா) மற்றும் அங்கிருந்து வந்த வேளிர் வம்சாவளியினரைச் சுட்டிக்காட்டி, குஜராத் மண்ணின் மைந்தரான மோடி தமிழகத்தோடு வரலாற்று ரீதியாக இணைந்தவர் என்றார். முதல்வர் ஸ்டாலின் பயத்தின் காரணமாகவே தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பதாக அவர் சாடினார்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுகவின் “மக்கள் விரோத” ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர பிரதமர் மோடி ‘துவரை கோமானாக’ வந்துள்ளதாக தினகரன் குறிப்பிட்டார். கபாடபுரத்தில் நடந்த இரண்டாம் தமிழ்ச் சங்கம் முதல் காசி தமிழ்ச் சங்கமம் வரை மோடியின் தமிழ்ப்பற்றை அவர் பட்டியலிட்டார். வரும் சட்டமன்றத் தேர்தலில் ஊழல் ஆட்சியை அகற்றி, மீண்டும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூலம் நிலைநாட்ட அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என அவர் அறைகூவல் விடுத்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *