5 ஆண்டுகளில் வெறும் 5 பேராசிரியர்கள் நியமனம் உயர்கல்வித் துறையை சீரழித்த திமுக அரசின் சாதனை

5 ஆண்டுகளில் வெறும் 5 பேராசிரியர்கள் நியமனம் உயர்கல்வித் துறையை சீரழித்த திமுக அரசின் சாதனை

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதாகக் கூறிவிட்டு, வெறும் 5 பேரை மட்டுமே நியமித்து திமுக அரசு ஏமாற்றிவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் உயர்க்கல்வித் துறையை அதலபாதாளத்திற்கு தள்ளியதே இந்த அரசின் உண்மையான சாதனை என்று அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்வு வாரியத்தின் மெத்தனப் போக்கினால் பல்லாயிரக்கணக்கான தகுதியான விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி பணி நியமனங்களை முடக்கியது கண்டிக்கத்தக்கது என்றும், காலியாக உள்ள 9,000 பணியிடங்களை நிரப்பாதது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த துரோகத்திற்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என அன்புமணி எச்சரித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *