3 மணிநேர பயணம் இனி 55 நிமிடங்களில் நமோ பாரத் ரயிலின் அதிரடி வேகம்

3 மணிநேர பயணம் இனி 55 நிமிடங்களில் நமோ பாரத் ரயிலின் அதிரடி வேகம்

டெல்லி முதல் மீரட் வரையிலான 82 கி.மீ தொலைவை இணைக்கும் நாட்டின் முதல் அதிவேக மண்டல போக்குவரத்து அமைப்பான நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த ரயில், சாலை மார்க்கமாக 3 மணிநேரம் எடுக்கும் பயணத்தை வெறும் 55 நிமிடங்களாக குறைத்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

குளிரூட்டப்பட்ட பெட்டிகள், வைஃபை மற்றும் சிசிடிவி போன்ற நவீன வசதிகளுடன் இந்த ரயில் 16 நிலையங்களை இணைக்கிறது. நகர்ப்புற போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் விரைவான பயணத்தை உறுதி செய்யவும் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம், பொதுமக்களின் அன்றாட பயண முறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *