3 படுக்கையறைகள் இருந்தும் ஏன் ஒரே அறை? காஜியாபாத் சிறுமிகள் மரணத்தில் பகீர் பின்னணி!

3 படுக்கையறைகள் இருந்தும் ஏன் ஒரே அறை? காஜியாபாத் சிறுமிகள் மரணத்தில் பகீர் பின்னணி!

மூன்று படுக்கையறைகள் கொண்ட விசாலமான வீடு, ஆனாலும் 3 மனைவிகள் மற்றும் 5 குழந்தைகளுடன் ஒரே அறையில் நெரிசலாக வாழ்ந்து வந்த சேத்தன் குமார். காஜியாபாத்தில் மூன்று சிறுமிகள் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், இந்த விசித்திரமான வாழ்க்கை முறையே தற்போது காவல்துறையினருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குடும்பக் கட்டுப்பாடா அல்லது கடும் நிதி நெருக்கடியா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

பங்குச் சந்தையில் ஏற்பட்ட மிகப்பெரிய நஷ்டம் மற்றும் குடும்பத்தில் நிலவிய சிக்கலான சூழல் குழந்தைகளின் மனநலத்தை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. கொரிய கலாச்சாரத்தின் மீது கொண்ட அதீத ஈர்ப்பு மற்றும் செல்போனை பறித்தது போன்ற காரணங்கள் தற்கொலைக்குத் தூண்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று தாய்மார்கள் கொண்ட அந்த வீட்டில் வளர்ந்த சிறுமிகளின் நாட்குறிப்புகளில், தீராத மனக்கசப்பும் குடும்பச் சண்டைகளும் மட்டுமே மிஞ்சியுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *