2029 மக்களவைத் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய மோடி அரசு அதிரடி நடவடிக்கை

2029 மக்களவைத் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய மோடி அரசு அதிரடி நடவடிக்கை

மத்திய அரசு கொண்டு வந்த ‘நாரி சக்தி வந்தன்’ சட்டத்தை 2029 மக்களவைத் தேர்தலிலேயே நடைமுறைப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை போன்ற சிக்கலான நிபந்தனைகளைத் தளர்த்தி, பணிகளை விரைந்து முடிக்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தேவையான அரசியலமைப்புச் சட்டத் திருத்தப் பணிகளும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க இந்த நடவடிக்கை முக்கியமானது என கருதப்படுகிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளது. நடப்புக் கூட்டத்தொடரிலேயே சட்டச் சிக்கல்களைக் களைந்து, இந்த மசோதாவைச் செயல்படுத்துவதற்கான இறுதிக்கட்டப் பணிகளை முடிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *