2027 ஒருநாள் உலகக்கோப்பைக்காக பும்ராவிற்கு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்க பிசிசிஐ அதிரடி முடிவு

2027 ஒருநாள் உலகக்கோப்பையை வெல்லும் நோக்கில் ஜஸ்பிரித் பும்ராவிற்கு பணிச்சுமையை குறைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்காக அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம். தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரில் பும்ராவை முழு உடற்தகுதியுடன் களமிறக்க இந்திய அணி நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் பும்ரா தொடர்ந்து விளையாடினாலும், இனி ஒருநாள் போட்டிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகக்கோப்பைக்கு முன்பாக சுமார் 35 ஒருநாள் போட்டிகளில் அவரை விளையாட வைத்து தயார்படுத்த வாரியம் திட்டமிட்டுள்ளது. அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கும் இதில் முக்கியத்துவம் அளிக்கப்படும். ஐபிஎல் தொடருக்குப் பிறகு இதுகுறித்த அதிகாரப்பூர்வ ஆலோசனை நடைபெறவுள்ளது.