2026-ன் முதல் சூரிய கிரகணம் எப்போது தெரியுமா? இந்தியாவில் தெரிய வாய்ப்புள்ளதா

வானியல் ஆர்வலர்களுக்கு விருந்தாக 2026-ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி 17-ஆம் தேதி நிகழவுள்ளது. சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காததால் உருவாகும் ‘நெருப்பு வளையம்’ போன்ற இந்த அரிய கங்கண சூரிய கிரகணத்தைக் காண உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நாசாவின் தகவல்படி, இந்த கிரகணம் பிரதானமாக அண்டார்டிகா பகுதிகளில் முழுமையாகவும், தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் பகுதியளவிலும் தென்படும்.
இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தென்படாது என்பதால், இதற்கான மத ரீதியான ‘சூதக்’ கால கட்டுப்பாடுகள் ஏதும் இங்கே பொருந்தாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அண்டார்டிகா போன்ற கிரகணம் தெரியும் பகுதிகளில் உள்ளவர்கள், சூரியனை நேரடியாகப் பார்க்காமல் சான்றளிக்கப்பட்ட சோலார் பில்டர் அல்லது சிறப்பு கண்ணாடிகளைப் பயன்படுத்துமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.