1970 களின் எரிபொருள் நெருக்கடி மீண்டும் உலகை அச்சுறுத்துகிறது என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் எச்சரிக்கை
March 9, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றத்தால் உலக நாடுகள் கடும் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன. ஹர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை 20 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், இது 1970-களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை விட மோசமாக இருக்கக்கூடும் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழ் எச்சரித்துள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சத்தில் இருப்பதால் இந்த விலை உயர்வு பெரும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும். சவுதி அரேபியா மற்றும் குவைத்தின் எண்ணெய் உற்பத்தி மையங்கள் மீதான தாக்குதல் அச்சம் காரணமாக உலகளாவிய விநியோக சங்கிலியில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.