15 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் துரோகம் ஜிபிஎஸ் கருவி மூலம் மனைவியை ஓட்டலில் பிடித்த கணவன்
December 17, 2025

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 15 ஆண்டுகால திருமண வாழ்க்கையை சீர்குலைக்கும் விதமாக ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த ரவி குலாட்டி என்பவர், மனைவியின் இருசக்கர வாகனத்தில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தியுள்ளார். அதன் மூலம் கிடைத்த தகவலின்படி, ஒரு ஹோட்டலுக்குச் சென்று தனது மனைவியை வேறொரு நபருடன் கையும் களவுமாகப் பிடித்தார்.
கடந்த 2010-ல் திருமணமான இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். ஏற்கனவே 2018-ல் இதேபோன்ற தவறுக்காக மன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சிக்கிய மனைவி தனது தாய் வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், குடும்ப உறவுகளில் நிலவும் நம்பிக்கை துரோகம் குறித்து பெரும் விவாதம் எழுந்துள்ளது.