14 நாட்களுக்கு தொடர்ந்து எலுமிச்சை நீர் குடித்தால் என்ன நடக்கும்? நிபுணர்கள் சொல்லும் உண்மைகள்!

தினமும் 14 நாட்களுக்கு தொடர்ந்து எலுமிச்சை நீர் குடித்தால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று தெரியுமா? இது குறித்து ஹார்வர்டு குடல் நிபுணர் டாக்டர் சௌரப் ஷெட்டி சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். எலுமிச்சையில் சுமார் 30 வகையான பைட்டோநியூட்ரியண்ட்ஸ், வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே, 14 நாட்கள் தொடர்ந்து எலுமிச்சை நீர் குடிப்பதால் உடலில் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படுகின்றன.
எலுமிச்சை நீர் இரும்புச் சத்து உறிஞ்சுதலை அதிகரித்து, சருமப் பொலிவை மேம்படுத்துகிறது மற்றும் தசைநாண்களை பலப்படுத்துகிறது. இது ஒரு இயற்கையான நச்சு நீக்கி பானமாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, எடை குறைப்பு, வீக்கத்தைக் குறைப்பது மற்றும் ஆற்றலை அதிகரிப்பது ஆகியவற்றுக்கும் உதவுகிறது. தொடர்ந்து எலுமிச்சை நீர் அருந்துபவர்கள் தங்களை அதிக சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் உணர்கிறார்கள்.