11 நாட்களில் சரிந்த ‘பேஸ்பால்’ வியூகம்! அடிலெய்டில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஷஸ் தொடரை வென்றது ஆஸ்திரேலியா
December 21, 2025

அடிலெய்டு டெஸ்டில் 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, 3-0 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரை கைப்பற்றியது. ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், வெறும் 11 நாட்களில் தொடர் முடிவுக்கு வந்தது.
ஜேமி ஸ்மித் மற்றும் வில் ஜாக்ஸ் போராடியும், தேவையற்ற அதிரடியால் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஆஷஸை தக்கவைத்துள்ள நிலையில், இங்கிலாந்தின் ‘பேஸ்பால்’ அதிரடி ஆட்டம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.