1 லட்ச ரூபாய் கடனுக்காக விவசாயியின் சிறுநீரகம் பறிப்பு கந்துவட்டி கொடுமையின் உச்சம்
December 18, 2025

மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் 1 லட்ச ரூபாய் கடனை 74 லட்சமாக உயர்த்தி, ஒரு விவசாயியின் சிறுநீரகத்தை கந்துவட்டி கும்பல் பறித்துள்ளது. நாளொன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வட்டி வசூலிக்கப்பட்ட நிலையில், நிலம் மற்றும் டிராக்டரை இழந்தும் கடன் தீராததால் அந்த விவசாயி குடும்பத்துடன் தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்தியாவில் கந்துவட்டி முறையை கட்டுப்படுத்த மாநில அளவில் தனிச்சட்டம் மற்றும் மத்திய அரசின் கடன் சட்டங்கள் உள்ளன. உரிமம் இன்றி கடன் வழங்குவது தண்டனைக்குரியது என்றாலும், மிரட்டல் விடுத்தால் மட்டுமே கடும் நடவடிக்கை சாத்தியம். இதை தடுக்க தற்போது அபராதம் மற்றும் சிறை தண்டனையுடன் கூடிய புதிய சட்டத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.