ஹார்முஸ் நீர்சந்தி மூடல் எதிரொலியால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு

ஹார்முஸ் நீர்சந்தி மூடல் எதிரொலியால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு

ஈரான் மோதலால் ஹார்முஸ் நீர்சந்தி மூடப்பட்டதை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலரை தாண்டியுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடும் பொருளாதார தேக்கநிலை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் நிரம்பியதால் உற்பத்தி நிறுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியை சமாளிக்க அமெரிக்க கடற்படை பாதுகாப்புடன் எண்ணெய் கப்பல்களை இயக்க திட்டமிட்டாலும் ஈரான் ராணுவத்தின் அச்சுறுத்தலால் பென்டகன் தயக்கம் காட்டுகிறது. தேர்தல் நெருங்கும் வேளையில் பெட்ரோல் விலையை கட்டுக்குள் வைப்பது டிரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *