ஹார்முஸ் நீரிணையில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு இடையே சிக்கிய 34 இந்திய மாலுமிகள் உயிருக்கு போராடும் அவலம்

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் ஹார்முஸ் நீரிணை அருகே எல்பிஜி ஏற்றி வந்த இந்தியக் கப்பல் நடுவழியில் சிக்கியுள்ளது. குவைத்திலிருந்து குஜராத் நோக்கிப் பயணித்த இக்கப்பலில் உள்ள 34 இந்திய மாலுமிகள், தங்கள் தலைக்கு மேல் ஏவுகணைகளும் ட்ரோன்களும் பறப்பதால் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் மினா சகர் துறைமுகம் அருகே இக்கப்பல் நங்கூரமிட்டுள்ளது.
கப்பலில் உள்ள 60 நாள் உணவு இருப்பு தீருவதற்குள் தங்களை மீட்குமாறு மாலுமிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மும்பையில் உள்ள இவர்களின் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ள நிலையில், கப்பல் கேப்டன் வீரேந்திர விஸ்வகர்மா இந்திய கடற்படையின் பாதுகாப்பைக் கோரியுள்ளார். கப்பல் நிறுவனமான கிரேட் ஈஸ்டர்ன் ஷிப்பிங் மற்றும் அமைச்சக அதிகாரிகள் மாலுமிகளைப் பத்திரமாக மீட்க கடற்படையுடன் இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.