ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்: ஈரானின் விஸ்வரூபத்தால் அதிரும் உலக சந்தை

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்: ஈரானின் விஸ்வரூபத்தால் அதிரும் உலக சந்தை

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, ஈரான் தனது மிகப்பொரிய ஆயுதமான ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியுள்ளது. உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் 30% நடைபெறும் இந்தப் பாதை மூடப்பட்டதால், சர்வதேசச் சந்தையில் ஒரு பேரல் எண்ணெயின் விலை $120-ஐத் தாண்டியுள்ளது. இது வல்லரசு நாடுகளின் பொருளாதாரத்தையே முடக்கும் ஈரானின் அதிரடி பதிலடியாகப் பார்க்கப்படுகிறது.

ஈரானின் இறையாண்மையை அங்கீகரித்து, தாக்குதல்களுக்கு இழப்பீடு வழங்கினால் மட்டுமே இந்தப் பாதை திறக்கப்படும் என அதிபர் மசூத் பெசெஷ்கியான் நிபந்தனை விதித்துள்ளார். இந்தியாவின் எரிவாயு மற்றும் பெட்ரோல் தேவையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழல், உலக நாடுகளைப் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. போரைத் தொடங்கிவைத்த நாடுகளுக்கு, தற்போதைய பொருளாதார நெருக்கடியின் மூலம் ஈரான் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *