ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்த ஈரான் சிறப்பு அனுமதி

ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்த ஈரான் சிறப்பு அனுமதி

சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்த குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் ஈரான் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மஜித் தக்த்-ரவாஞ்சி கூறுகையில், சில நாடுகளின் கோரிக்கையை ஏற்று இந்த ஒத்துழைப்பு வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த நாடுகளின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

இஸ்ரேல் அல்லது அமெரிக்காவிற்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகள் இந்த கடல் வழியைப் பயன்படுத்த முடியாது என்று ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மூடப்படும் வரை இந்த நிலை நீடிக்கும் என்று ஈரானின் உயர்மட்டத் தலைவர் மோஜ்தபா கமேனி எச்சரித்துள்ளார். கடந்த 13 நாட்களாக நீடிக்கும் இந்த தடையால் உலக சந்தையில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *