ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவுடன் கைகோர்க்குமா இந்தியா ட்ரம்பின் அழைப்பால் பரபரப்பு

ஈரான் மூடியுள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க நட்பு நாடுகளின் போர்க்கப்பல் உதவியை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ளார். சர்வதேச எரிசக்தி விநியோகத்தை சீர்செய்ய இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். வர்த்தகத்திற்கு இடையூறு விளைவித்தால் ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்புகள் தாக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில் மேற்கு ஆசியாவில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
ஈரான் இந்தியக் கப்பல்களுக்குச் சலுகை அளித்தாலும் வாஷிங்டனின் அழைப்பிற்கு டெல்லி செவிசாய்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் ஈரான் அதிபர் பெசேஷ்கியன் இடையிலான பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. தனது எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்யவும் சர்வதேச உறவுகளைச் சமநிலைப்படுத்தவும் இந்தியா மேற்கொள்ளப்போகும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து உலக நாடுகள் உற்று நோக்குகின்றன.