ஹர்திக் பாண்டியாவின் அசைக்க முடியாத ஐசிசி வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது

ஹர்திக் பாண்டியாவின் அசைக்க முடியாத ஐசிசி வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது

2026 டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வியடைந்ததால், ஹர்திக் பாண்டியாவின் சாதனை வெற்றிப் பயணம் முடிவுக்கு வந்தது. 2022 டி20 உலகக்கோப்பை அரை இறுதிக்குப் பிறகு, ஐசிசி தொடர்களில் அவர் தொடர்ந்து விளையாடிய 21 போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் சாதனை படைத்திருந்தார்.

இந்த தோல்வியின் மூலம் ஹர்திக்கின் நீண்டகால வெற்றி ஓட்டம் தடைபட்டது. இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க் மற்றும் ஷான் டைட் ஆகியோர் இந்த சாதனையில் முதலிடத்தில் இருந்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி போட்டியில் ஹர்திக் பாண்டியா தோல்வியைத் தழுவியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *