ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பில் சால்ட்டை விடுவித்தது கேகேஆர் செய்த மிகப்பெரிய தவறு
March 14, 2026

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது மூன்றாவது ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பில் சால்ட்டை விடுவித்தது தவறான முடிவு என்று முன்னாள் இந்திய கேப்டன் அனில் கும்ப்ளே விமர்சித்துள்ளார். வீரர்களைத் தக்கவைப்பதில் அந்த அணி நிர்வாகம் தொடர்ந்து சொதப்பலான முடிவுகளையே எடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோப்பையை வென்று கொடுத்த கேப்டனை அணியில் இருந்து நீக்கியது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கும்ப்ளே தெரிவித்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்ற ஸ்ரேயாஸின் அனுபவம் கொல்கத்தா அணிக்கு பெரும் பலமாக இருந்திருக்கும். அனுபவம் வாய்ந்த ரஹானே கேப்டனாக இருந்தாலும், ஸ்ரேயாஸ் இல்லாதது அணியின் வெற்றி வாய்ப்பைக் குறைக்கலாம் என்று அவர் எச்சரித்துள்ளார்.