ஸ்கூட்டியை பார்த்து பயந்த யானை! பெண் ஓட்டுநரை கண்டதும் சாலையிலிருந்து தப்பியோடிய யானையின் வைரல் வீடியோ
September 19, 2025

சமூக வலைதளங்களில் யானையின் வேடிக்கையான வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், ஒரு பெரிய யானை சாலையை கடந்து செல்கிறது. அப்போது திடீரென ஸ்கூட்டியில் ஒரு பெண் எதிரே வர, அதைக் கண்டு யானை பயந்துபோய், தன்னை காப்பாற்றிக்கொள்ள வேகமாக சாலையின் மறுபக்கத்திற்கு ஓடி விடுகிறது.
யானை மற்றும் ஸ்கூட்டிக்கு இடையே ஒரு பெரிய விபத்து நேரிடாமல் மயிரிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். வேகமாக வந்த ஸ்கூட்டரால் யானை பயந்துபோய்விட்டதாக பலர் கேலி செய்துள்ளனர்.