ஷில்பா ஷெட்டியின் புகைப்படம் மற்றும் குரலை அனுமதியின்றி பயன்படுத்த மும்பை உயர்நீதிமன்றம் தடை விதிப்பு

ஷில்பா ஷெட்டியின் புகைப்படம் மற்றும் குரலை அனுமதியின்றி பயன்படுத்த மும்பை உயர்நீதிமன்றம் தடை விதிப்பு

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இனிமேல் நடிகையின் அனுமதி இன்றி அவருடைய பெயர், புகைப்படம் அல்லது குரலைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். இணையதளங்களில் ‘டீப்ஃபேக்’ தொழில்நுட்பம் மூலம் அடையாளம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நடிகையின் சம்மதம் இன்றி அவருடைய அடையாளத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்துவது தண்டனைக்குரியது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இணையதளங்களில் உள்ள அவதூறான தகவல்களை உடனடியாக நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்துள்ள இந்த வெற்றி, ஷில்பா ஷெட்டியின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை கண்ணியத்தைப் பாதுகாப்பதில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *