வேலையில் சேர்ந்த முதல் வாரத்திலேயே 100 சதவீத டிஸ்கவுண்ட் கூப்பன் மூலம் 2 லட்சம் மோசடி
February 23, 2026

டெல்லியைச் சேர்ந்த கல்லி லேப்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை பிரிவில் சேர்ந்த ஊழியர் ஒருவர் அதிர்ச்சியூட்டும் மோசடியில் ஈடுபட்டுள்ளார். வேலையில் சேர்ந்த முதல் வாரத்திலேயே நிறுவனத்தின் மென்பொருளைப் பயன்படுத்தி 100 சதவீத தள்ளுபடி கூப்பன்களை உருவாக்கினார். இதன் மூலம் தனது நண்பர்களுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான காலணிகளை இலவசமாக அனுப்பிவிட்டு பணியிலிருந்து மாயமானார்.
இந்த மோசடி குறித்து நிறுவனம் கேள்வி எழுப்பியபோது பயன்படுத்தப்பட்ட சில காலணிகளை மட்டும் அவர் திருப்பி அளித்தார். மீதமுள்ள தொகைக்கு ஈடாக பணம் கேட்டபோது அந்த முன்னாள் ஊழியர் நிறுவனத்தின் மீதே அபாண்டமாக பழிசுமத்தி சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த வினோத மோசடி சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.