வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு: 2 நேஷனல் கார்டுகள் காயம்; ஐஎஸ்ஐ மீது ஆப்கன் அரசு பகீர் குற்றச்சாட்டு!

வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு: 2 நேஷனல் கார்டுகள் காயம்; ஐஎஸ்ஐ மீது ஆப்கன் அரசு பகீர் குற்றச்சாட்டு!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே புதன்கிழமை நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், நேஷனல் கார்டு படையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர். சந்தேகத்திற்குரிய நபர் ஆப்கானிஸ்தான் குடிமகன் என அடையாளம் காணப்பட்டார். இந்தத் தாக்குதலில் ஆப்கானிஸ்தானுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று தலிபான் அரசு மறுத்துள்ளது. தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) பயிற்சி அளித்தது என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

முஜாஹித் மேலும் கூறுகையில், “அமெரிக்காவில் தாக்குதல் நடத்தியவருக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். பாகிஸ்தான் உளவு அமைப்பால் பயிற்சி அளிக்கப்பட்டு, இஸ்லாமாபாத் வழியாக அவர் அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இதனை பயங்கரவாதத் தாக்குதல் என்று கூறி, பாதுகாப்பை அதிகரிக்கவும், 2021-ல் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்களை மீண்டும் பரிசோதனை செய்யவும் உத்தரவிட்டார். தாக்குதல் நடத்தியவர் 29 வயதான ரஹ்மானுல்லா லக்னவால் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *