வெளுத்து வாங்கப்போகும் கனமழை அடுத்த ஒரு மணி நேரத்தில் குமரி மற்றும் நெல்லையில் அதிரடி மாற்றம்
March 14, 2026

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்தில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த திடீர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மார்ச் 20 ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக மார்ச் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை நீடிக்க வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் வறண்ட வானிலையே நிலவும்.