வீட்டுக்குள் பைக்கை ஆன் செய்து வைத்த விபரீதம் ஆந்திராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மூச்சுத்திணறலால் பலி

வீட்டுக்குள் பைக்கை ஆன் செய்து வைத்த விபரீதம் ஆந்திராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மூச்சுத்திணறலால் பலி

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் மெக்கானிக் அறிவுரைப்படி இரவு முழுவதும் வீட்டுக்குள் மோட்டார் சைக்கிளை ஆன் செய்து வைத்ததால் ஏற்பட்ட புகையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். இதில் 70 வயது முதியவர் மற்றும் மூன்று சிறுவர்கள் பரிதாபமாக பலியாகினர்.

ஜன்னல்கள் மற்றும் கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில் பைக்கிலிருந்து வெளியேறிய நச்சுத்தன்மை கொண்ட கார்பன் மோனாக்சைடு வாயு வீடு முழுவதும் பரவியதே இந்த உயிரிழப்பிற்கு காரணமாகும். மொட்டை மாடியில் தூங்கிய தம்பதியினர் உயிர் தப்பிய நிலையில், இந்த கோர விபத்து புங்கனூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *