விவாதத்தால் பதவியை இழந்த ஐஸ்லாந்து அமைச்சர்

விவாதத்தால் பதவியை இழந்த ஐஸ்லாந்து அமைச்சர்

ஐஸ்லாந்தில் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்த ஆஸ்தில்டர் லோவா (58) சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் தன் சிறுவயது அனுபவங்களை பகிர்ந்து பேசினார். பேச்சின் போது, அவர் 22 வயதில் இருந்தபோது 15 வயது மாணவருடன் உறவு வைத்துக் கொண்டு குழந்தை பெற்றதாக கூறினார்.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, ஒரு அரசு அமைச்சராக இருந்து இத்தகைய பகிர்வை செய்தது கண்டனங்களை ஏற்படுத்தியது. இச்சிக்கல் பெரிதாக மாறியதால், ஆஸ்தில்டர் லோவா தனது அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்துள்ளார்.

இந்த சம்பவம் ஐஸ்லாந்தில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *