விழுப்புரத்தில் குடும்பத் தகராறால் விபரீதம், மனைவியை காப்பாற்ற முயன்ற கணவன் உட்பட இருவர் பலி

விழுப்புரத்தில் குடும்பத் தகராறால் விபரீதம், மனைவியை காப்பாற்ற முயன்ற கணவன் உட்பட இருவர் பலி

விழுப்புரம் அருகே சோழகனூரில் சக்திபரதன்-ராஜகுமாரி தம்பதியிடையே ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் துயரத்தில் முடிந்தது. கோபத்தில் ராஜகுமாரி கிணற்றில் குதித்ததைக் கண்டு, அவரைக் காப்பாற்ற நீரில் குதித்த சக்திபரதனும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இருவரது உடல்களையும் மீட்டனர். ஆறு ஆண்டு கால காதல் வாழ்க்கை முடிவுக்கு வந்த நிலையில், தற்போது அவர்களது இரண்டு சிறு குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு சிறிய அவசர முடிவு ஒரு முழு குடும்பத்தையே அழித்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *