விமானத்தின் கழிப்பறையில் பீடி குடித்த பயணி கைது
March 9, 2026

டெல்லியில் இருந்து கோவா சென்ற ஆகாசா ஏர் விமானத்தில் கழிப்பறைக்குள் பீடி குடித்த ஆஷிஷ் என்ற பயணி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த லைட்டர் விமானத்தின் பாதுகாப்பு மற்றும் பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவா விமான நிலையம் வந்தடைந்ததும் அந்த பயணி பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். விமான பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக மோபா விமான நிலைய போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.