விடாத ரீல்ஸ் போதை; செயலிழக்கும் கட்டைவிரல்: ஜென்-ஜி இளைஞர்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை!

ஸ்மார்ட்போன் திரையில் மணிக்கணக்காக ரீல்ஸ் பார்ப்பது மற்றும் கேமிங் விளையாடும் மோகத்தால், நகர்ப்புற இளைஞர்கள் கடுமையான உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். அதிகப்படியான விரல் பயன்பாட்டினால் ‘கார்யல் டன்னல் சிண்ட்ரோம்’ (Carpal Tunnel Syndrome), ‘ட்ரிக்கர் ஃபிங்கர்’ (Trigger Finger) மற்றும் ‘கேமர்ஸ் தம்ப்’ (Gamer’s Thumb) போன்ற டிஜிட்டல் நோய்கள் பலரைத் தாக்கி வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் விளைவாக மணிக்கட்டில் கடுமையான வலி, விரல்கள் மடக்க முடியாமல் போவது மற்றும் கையில் இருக்கும் பொருட்கள் திடீரென நழுவி விழுவது போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு ஏற்படும் வலி தொடர்பான பிரச்சனைகளில் சுமார் 37 சதவீதம் கை மற்றும் மணிக்கட்டு சார்ந்தவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தப் பாதிப்பைத் தவிர்க்க, வேலைக்கு இடையில் இடைவேளை எடுப்பது, சரியான முறையில் டைப்பிங் செய்வது மற்றும் மணிக்கட்டுக்கு மென்மையான ஆதாரங்களை (Wrist Support) பயன்படுத்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இப்போதே விழிப்புணர்வுடன் செயல்படாவிட்டால், கைகளின் இந்த ‘டிஜிட்டல் கிளர்ச்சி’ நிரந்தர ஊனத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.