விஜய் vs பொன்ராஜ் அரசியல் களத்தில் வெடித்த நேரடி மோதல்
March 27, 2026

தமிழக வெற்றிக் கழக பெண் தொண்டர்களை அவதூறாகப் பேசிய விவகாரத்தில் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது விஜய் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதற்குப் பதிலடியாக, பொன்ராஜ் விஜய்யை நோக்கி 5 அதிரடி கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், “ஆதாய சூதாடி நீங்களா அல்லது நானா?” எனச் சமூக வலைத்தளத்தில் பகிரங்கமாகச் சவால் விடுத்துள்ளார்.
விஜய்யின் கார் மோதி காயமடைந்த பெண் தொண்டரிடம் முதலில் மன்னிப்பு கேட்குமாறு பொன்ராஜ் வலியுறுத்தியுள்ளார். தனது குடும்பத்தினருக்கு விடுக்கப்படும் மிரட்டல்கள் குறித்துச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். இந்த மோதலால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.