விஜய் உள்ளிட்ட 234 தொகுதிகளிலும் தவெக டெபாசிட் இழக்கும் என முன்னாள் மேலாளர் விளாசல்
March 13, 2026

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததே ஒரு மிகப்பெரிய தவறு என அவரது முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வரும் தேர்தலில் விஜய் உட்பட தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பார்கள் என்று கணித்துள்ளார். ரசிகர்களை நம்பி தங்கள் வாழ்க்கையையும் பணத்தையும் வீணாக்க வேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விஜய்யுடன் இருப்பவர்கள் அவரைச் சரியாக வழிநடத்தவில்லை என்றும், தனது குடும்பத்தையும் பெற்றோர்களையும் மதிக்காதவர் மக்களை எப்படிக் காப்பார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய்யின் அரசியல் முடிவுகள் அனைத்தும் தவறாகவே முடியும் என்றும், ரஜினிகாந்த் போன்ற மேதைகளை விமர்சிக்க தவெக நிர்வாகிகளுக்குத் தகுதியில்லை என்றும் செல்வகுமார் கடுமையாகத் விமர்சித்துள்ளார்.