விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? உண்மையை உடைத்த பவன் கல்யாண்

விஜய்யுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? உண்மையை உடைத்த பவன் கல்யாண்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை என்.டி.ஏ கூட்டணியில் இணைக்க ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய்க்கு துணை முதல்வர் பதவி உள்ளிட்ட பல்வேறு ஆஃபர்கள் வழங்கப்பட்டதாகவும் செய்திகள் பரவின.

இந்நிலையில், இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள பவன் கல்யாண், விஜய்யைச் சந்தித்து ২০ ஆண்டுகள் ஆகிறது என்று தெரிவித்துள்ளார். அவருடன் தான் பேசவில்லை என்றும், இத்தகவல் எப்படி பரவியது என்று தெரியவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார். கூட்டணி என்பது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பத்தைப் பொறுத்தது என்றும் அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *