விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் சிக்கலுக்கு நாளை ஒரு விடிவுகாலம் பிறக்குமா
March 16, 2026

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் நீண்டகாலமாக இழுபறி நீடித்து வந்தது. நீதிமன்ற வழக்குகள் மற்றும் மறுதணிக்கை கோரிக்கைகளுக்குப் பிறகு, நாளை தணிக்கை வாரியத்தின் மறுஆய்வுக் குழுவினர் இந்தப் படத்தைப் பார்த்து இறுதி முடிவெடுக்க உள்ளனர்.
நாளை ஒருவேளை ஆய்வு நடைபெறாவிட்டால், வரும் மார்ச் 19-ஆம் தேதி படம் திரையிடப்படும் எனத் தெரிகிறது. சான்றிதழ் கிடைப்பதில் நிலவும் தாமதத்தால் முடங்கியுள்ள இப்படம், இந்த ஆய்வுக்குப் பிறகு விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.