விஜயை வீழ்த்த தி.மு.க.வின் பலப்பரீட்சை வியூகம் தீவிரம்
March 12, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் அல்லது திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, பெரம்பூர் தொகுதியில் நிலவும் சாதகமான வாக்கு வங்கி சூழலை கருத்தில் கொண்டு விஜய் அங்கு களம் காண அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, விஜய்க்கு செக் வைக்க தி.மு.க. தலைமை தற்போதே வியூகம் வகுக்கத் தொடங்கியுள்ளது. பெரம்பூரில் செல்வாக்குமிக்க அமைச்சர் சேகர் பாபுவை களமிறக்க ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், திருச்சி கிழக்கில் விஜயை எதிர்த்து ஒரு வலுவான தொழிலதிபரை நிறுத்த அமைச்சர் நேரு தரப்பு திட்டமிட்டுள்ளது. விஜயை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக உள்ளது.