வாழைப்பழத்தை விட அதிக சத்து கொண்ட சர்க்கரைவள்ளிக் கிழங்கு நீரிழிவு நோய்க்கு மருந்தாகுமா
March 14, 2026

சர்க்கரைவள்ளிக் கிழங்கு வெறும் சுவையான உணவு மட்டுமல்ல, அது நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாகும். இதில் உள்ள வைட்டமின் பி-6 மற்றும் டி சத்துக்கள் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதோடு, எலும்புகளைப் பலப்படுத்துகின்றன. வாழைப்பழத்தை விட அதிக பொட்டாசியம் கொண்ட இது, ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கவும் சருமப் பொலிவை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.
நார்ச்சத்து அதிகம் கொண்டிருப்பதால் நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை இது மெதுவாகவே உயர்த்துகிறது. உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். இருப்பினும், பொட்டாசியம் மற்றும் ஆக்சலேட் அதிகம் இருப்பதால், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி இதை அளவோடு உண்பதே ஆரோக்கியத்திற்குப் பாதுகாப்பானது.