வாரம் ஏழு நாட்கள் ஏழு வெவ்வேறு நபர்களுடன் டேட்டிங், ஜென் ஜி இளைஞர்களின் புதிய கலாச்சாரம் உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா

நியூஸ் டெஸ்க் : இன்றைய இளைஞர்கள் காதலை அணுகும் முறையில் ‘ரோஸ்டர் டேட்டிங்’ என்ற புதிய முறை பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒரே நபருடன் மட்டும் பழகாமல், வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருடன் நேரத்தைச் செலவழித்து, தங்களுக்குப் பொருத்தமானவர் யார் என்பதைத் தீர்மானிப்பதே இதன் நோக்கம். ஒருவருடன் இரவு உணவு, மற்றோருவருடன் பயணம் எனப் பலரைச் சந்திப்பதன் மூலம், தவறான ஒருவருடன் அவசரமாகத் திருமண பந்தத்தில் இணைந்து பின் வருந்துவதைத் தவிர்க்க இந்த முறை உதவுகிறது.
தற்போதைய சமூகத்தில் நிலவும் பொருளாதார சுதந்திரம் மற்றும் சுய விருப்பங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவமே இத்தகைய மாற்றத்திற்குக் காரணமாகிறது. குறிப்பாக பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் அதிக விழிப்புணர்வுடன் செயல்படுகின்றனர். பழைய மரபுகளைத் தவிர்த்து, தங்களுக்கு ஏற்றவரைத் தேடும் இந்தச் சுதந்திரம், சமூகத்தில் உறவுகளின் ஆழம் மற்றும் நிலைத்தன்மை குறித்த புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது. இது திருமணத்திற்குப் பின் ஏற்படும் பிரிவுகளைக் குறைப்பதற்கான ஒரு வழியாகவும் பார்க்கப்படுகிறது.