வாய்ப்புண்ணை குணப்படுத்த சில முறைகளை அறிந்து கொள்ளுங்கள்

வாய்ப்புண் மிகவும் வேதனையானது. பொதுவாக வாயின் உட்புறத் தோலின் அடுக்கில் காயம் ஏற்படுவதன் மூலம் வாய் புண்கள் தொடங்குகின்றன. ஒரு காயத்திலிருந்து, முழு வாயிலும் சிறிய காயங்கள் உருவாகின்றன.
இதனால் வலி மற்றும் வேதனை அதிகரிக்கிறது. வாய்ப்புண் இருந்தால் சரியாக சாப்பிடவும் பேசவும் கூட கடினமாக இருக்கும். திடீரென வாயில் கடிபடுதல், டூத்பிரஷ்ஷின் காயம், கடினமான உணவை சாப்பிடும்போது ஏற்படும் உராய்வு, வைட்டமின் குறைபாடு, பல் குத்துதல், தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றால் வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன.
மறுபுறம், குளிர்காலத்தில் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் அதிகரிக்கும். இதனால், வாய் புண்களின் பிரச்சனையும் அதிகரிக்கிறது. பல்வேறு பாக்டீரியாக்கள் வாயில் தொற்றுநோயை ஏற்படுத்தும்.
இந்த நிலையில், நீங்கள் விரும்பினால், வீட்டு வைத்தியம் மூலமாகவும் இதற்கு தீர்வு காணலாம். அப்படிப்பட்ட 7 நிரூபிக்கப்பட்ட வைத்தியங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
தேன்
வீட்டில் இருந்தபடியே தேன் பயன்படுத்தி வாய் புண்களை குணப்படுத்தலாம். இதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாயின் ஈரப்பதத்தை பராமரிக்கவும் வறட்சியை போக்கவும் உதவுகின்றன. தேனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து வாய்ப்புண்ணில் பயன்படுத்தலாம்.
துளசி இலைகள்
மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி வாய்ப்புண்களை குணப்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாயை கிருமி நீக்கம் செய்கின்றன. வாய்ப்புண்ணை குணப்படுத்த துளசி இலைகளை மென்று சாப்பிடுங்கள் அல்லது துளசி கொதிக்க வைத்த வெந்நீரில் ஒரு நாளைக்கு இரண்டு முறை கொப்பளிக்கவும்.
உப்பு நீர்
வாய்ப்புண்ணை குணப்படுத்த உப்பு நீர் பயனுள்ளதாக இருக்கும். இந்த நீரில் கொப்பளிப்பது வாயில் உள்ள பாக்டீரியாக்களை நீக்குகிறது. உப்பு நீர் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை குறைக்கிறது. நல்ல பலன் பெற ஒரு நாளைக்கு இரண்டு முறை கொப்பளிக்கவும்.
பூண்டு
பூண்டில் இயற்கையான நுண்ணுயிர் எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. பூண்டைப் பயன்படுத்தி வாய் புண்களின் வலி மற்றும் காயங்களை போக்கலாம்.
இதில் அல்லிசின் என்ற பொருள் உள்ளது. இது காயங்களின் வலியை குறைக்க உதவுகிறது. நல்ல பலன் பெற பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு பல் பூண்டை ஒரு நாளைக்கு இரண்டு முறை தேய்க்கவும்.
ஆரஞ்சு சாறு
வைட்டமின் சி குறைபாட்டால் வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன. எனவே, ஆரஞ்சு சாற்றை அதிகமாக குடிக்கவும். இது தவிர, வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது அவசியம்.
டூத்பேஸ்ட்
டூத்பேஸ்டில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது புண் தொற்றுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. டூத்பேஸ்டை வாய் புண்ணில் தடவினால் வலி குறைந்து எரிச்சல் குணமாகும்.