வாட்ஸ்அப்பில் உங்கள் நெருக்கமானவர்கள் யாருடன் அதிகம் பேசுகிறார்கள் என்பதை கண்டறிய எளிய வழி

வாட்ஸ்அப்பில் உங்கள் பிரியமானவர்கள் யாருடன் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் அல்லது தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதை ரகசியமாக கண்காணிக்காமலேயே தெரிந்து கொள்ள முடியும். இதற்கு வாட்ஸ்அப் செயலியின் உள்ளேயே இருக்கும் ஒரு சிறப்பம்சத்தைப் பயன்படுத்தலாம். போனில் உள்ள வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று ‘ஸ்டோரேஜ் அண்ட் டேட்டா’ (Storage and Data) என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
அங்குள்ள ‘மேனேஜ் ஸ்டோரேஜ்’ பிரிவில் எந்தெந்த எண்கள் அல்லது குழுக்களுடன் அதிகப்படியான மீடியா கோப்புகள் பகிரப்பட்டுள்ளன என்ற பட்டியல் திரையில் தோன்றும். இந்தப் பட்டியலில் முதலில் இருக்கும் பெயரைக் கொண்டு யாருடன் அதிக தகவல் பரிமாற்றம் நடந்துள்ளது என்பதை அறியலாம். இருப்பினும், அலுவலக வேலைக்காக பெரிய கோப்புகளைப் பகிர்ந்திருந்தாலும் அந்தப் பெயர் பட்டியலில் முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.