வாட்ஸ்அப்பில் அதிரடி மாற்றம் இனி 15 நிமிடங்களில் மெசேஜ்கள் தானாகவே மறையும்

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி தனது பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘டிஸப்பியரிங் மெசேஜ்’ வசதியில் புதிய மாற்றத்தை சோதனை செய்து வருகிறது. இந்த புதிய அம்சத்தின் மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளை பெறுநர் படித்து முடித்த சரியாக 15 நிமிடங்களில் அவை தானாகவே மறைந்துவிடும். தற்போது ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்பட்டு வரும் இந்த அம்சம் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ரகசியமான மற்றும் முக்கியமான தகவல்களைப் பகிரும் போது கூடுதல் பாதுகாப்பை வழங்குவதே இந்த அப்டேட்டின் முக்கிய நோக்கமாகும். ஒருவேளை அனுப்பப்பட்ட மெசேஜை பெறுநர் படிக்கவில்லை என்றால் அது 24 மணிநேரம் வரை அப்படியே இருக்கும். ஆனால் படித்தவுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இரு தரப்பிலிருந்தும் அந்தத் தகவல் மாயமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.