வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் மக்கள் வேகத்தால் ரயில்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன

வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் மக்கள் வேகத்தால் ரயில்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ல் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, ஏப்ரல் 22 அன்று சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் முக்கிய ரயில்களின் டிக்கெட்டுகள் முழுமையாக விற்றுத் தீர்ந்தன. பாண்டியன், கன்னியாகுமரி, நெல்லை மற்றும் பொதிகை விரைவு ரயில்களில் காத்திருப்போர் பட்டியலில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற முன்கூட்டியே திட்டமிட்டதே இதற்கு முக்கிய காரணமாகும்.

இதேபோல் கோவை மற்றும் சேலம் மார்க்கமாக செல்லும் சேரன், ஏற்காடு ரயில்களிலும் முன்பதிவு முடிவடைந்தது. இருப்பினும், மதுரை மற்றும் கோவை மார்க்கத்தில் பகல் நேரத்தில் இயக்கப்படும் ரயில்கள் மற்றும் வந்தே பாரத் ரயில்களில் தற்போது காத்திருப்போர் பட்டியலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. சொந்த ஊர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையால் ரயில் நிலையங்களில் நெரிசல் அதிகரித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *