வர்த்தக காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகத் தொழில் கடும் பாதிப்பு

வர்த்தக காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகத் தொழில் கடும் பாதிப்பு

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் சூழலால் உலக சந்தையில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் வீடுகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால், உணவகங்களுக்கு வழங்கப்படும் வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் விநியோகம் தற்போது நாடு முழுவதும் முற்றிலும் முடங்கியுள்ளது.

புதிய சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவக உரிமையாளர்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். இந்த நிலை நீடித்தால் பலரின் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் உள்ளதாக ஹோட்டல் சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன. பாதிப்பை குறைக்க மத்திய பெட்ரோலிய அமைச்சகத்திடம் அவசர உதவி கோரப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *